இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று பாத யாத்திரையை தொடங்கினார் அண்ணாமலை!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் “என் மண் என் மக்கள்” என்ற பாஜக பாத யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினார். இரண்டு நாள் இடைவெளிக்கு பிறகு காரியப்பட்டி கிராமத்தில் இன்று மீண்டும் பாதயாத்திரியை தொடங்கியுள்ளார் அண்ணாமலை.
பாரதமாதா சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு பேட்ச் அணிந்து அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், தமிழகத்தின் கடைக்கோடி இடங்களுக்குச் சென்று எளிய மக்களின் குறைகளை கேட்டறிந்துகொள்வதே “என் மண் என் மக்கள்” யாத்திரையின் ஒரு முக்கிய நோக்கமாகும் என்றுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை, 28ம் தேதி முதல், ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்கினார். அதன்படி, ராமேஸ்வரம், சிவகங்கை, புதுக்கோட்டை சென்ற அவர், கடந்த ஞாயிற்று கிழமை மதுரையில் நிறைவு செய்தார். இதைத்தொடர்ந்து, 10 நாட்களாக பாதயாத்திரை நடந்த நிலையில், 7, 8ம் ஆகிய தேதிகளில் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், திருச்சுழியில் இருந்து மீண்டும் இன்று பாத யாத்திரையை தொடங்கினார் அண்ணாமலை.