காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்தி கட்டாயம் ஆனது.! பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி.!
ஹிந்தியில் மட்டும் தான் தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு கூறினால் தமிழக பாஜக கட்டாயம் அதனை எதிர்க்கும். இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. மூன்றாவது மொழியாக ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்று தான் புதிய கல்வி கொள்கை கூறுகிறது. என பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அமெரிக்கா சென்று இன்று தமிழகம் திரும்பிவிட்டார். சென்னை விமானநிலையம் வந்திறங்கிய அவர் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துக்களை பதிவிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘ இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. மூன்றாவது மொழியாக ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்று தான் புதிய கல்வி கொள்கை கூறுகிறது.’ என்று குறிப்பிட்டார்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் என திமுக தான் கபட நாடகம் ஆடுகிறது. 1960களிலேயே மாநிலங்களை செக்டர் ஏ,பி,சி, டி என பிரிந்துவிட்டார்கள். ஹரியானா , உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் தான் அந்த தேர்வு முறை இருக்கும். தமிழகம் அதில் பொருந்தாது. 1960 காலகட்டத்தில் காங்கிரஸ் தான் ஆட்சியில்தான் இந்தி கட்டாயமாக இருந்தது.’ எனவும் தனது கருத்தை அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும் பேசுகையில், ‘ ஹிந்தியில் மட்டும் தான் தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு கூறினால் தமிழக பாஜக கட்டாயம் அதனை எதிர்க்கும். இந்த ஹிந்தி மொழி போராட்ட கபட நாடகத்தை விடுத்தது மக்கள் வைக்கும் குற்றசாட்டுகளை திமுக சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.’ என பேசிவிட்டு சென்றார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.