தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரதமர் மோடி வீட்டிற்கு முன்போ, நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்போ, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு முன்போ தான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும்.
சிதம்பரத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் சிலர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் தலைமையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பாஜகவிடம் நெருக்கம் காட்டுவதால், பலரும் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், மேகதாது அணை விவகாரத்தில் வரைவு திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை சுட்டி காட்டி பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரதமர் மோடி வீட்டிற்கு முன்போ, நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்போ, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு முன்போ தான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். காவிரி டெல்டாவில் வந்து அவர் உண்ணாவிரதம் இருந்தது பொருளற்ற ஒன்று. யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…