முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் ஏழை எளிய மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக MLA க்கள் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “அதிமுகவை நோக்கி மாற்றுக் கட்சியை சார்ந்த பலர் அதிமுகவில் ஐக்கியமாகக் கொண்டுள்ளனர். நாங்கள் பாஜக மாதிரி வலை விரித்து பிடிக்கவில்லை, நேற்று கூட அண்ணாமலை கடை விதித்தார். அண்ணாமலை என்ற வியாபாரி கடை விதித்தார். அந்த கடையில் வாங்குவதற்கு ஆள் யாரும் வரவில்லை, அந்த கடைக்கும் யாரும் வரவில்லை. அது போனியாக ஆகாத கடை, அண்ணாமலை கடை போனியா ஆகாத கடை என விமர்சனம் செய்தார்.
பாஜகவின் 2 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இன்று இணைய உள்ளதாக செய்தியாளர் சந்திப்பின்போது அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் தெரிவித்தார். இன்று பிற்பகல் 2.15 மணிக்கு பாஜக எம்எல்ஏ 2 பேர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளனர் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…