கோவையில் அண்ணாமலை பின்னடைவு!
மக்களவை தேர்தல்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று (ஜூன் 4) காலை முதல் விறு விறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார். கோவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார் பி 46,086 வாக்குளை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில 33,898 வாக்குளை பெற்று அண்ணாமலை 12,188 வாக்கு வித்தியாசத்தில் பின் தங்கி இருக்கிறார்.