எனக்கு முதல்வர் ஆசை இல்லை… எங்க கட்சியில் 20 முதலமைச்சர் வேட்பாளர்கள் இருக்காங்க.! – அண்ணாமலை.

BJP State President Annamalai - JayakumarADMK

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எங்கள் கட்சியில் முதல்வர் வேட்பாளர் தகுதியோடு 15 -20 பேர் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

துக்ளக் – குருமூர்த்தி : 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் துக்ளக் வார பத்திரிகை 54வது ஆண்டு விழா நடைபெற்றது . இந்த விழாவினை துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்பி சசிதரூர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி , அண்ணாமலை அரசியலுக்கு வரும் முன்னர் அவரை எனக்கு தெரியாது. ஆனால் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும்போதே தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அண்ணாமலை. அதனை அப்போதே உணர்ந்த நடிகர்ரஜினிகாந்த், என்னிடம் அண்ணாமலை தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் என தெரிவித்தார் என துக்ளக் விழா மேடையில் கூறினார்.

ஜன.24ல் விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி – தேமுதிக அறிவிப்பு.!

ஜெயக்குமார் விமர்சனம் :

துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது.  இந்த நிகழ்வு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேசியுள்ளார். குருமூர்த்தி பேசியதை கேட்டேன். அவர் தனது ஆசையை சொல்லி இருக்கிறார்.

4 சுவற்றுக்குள் ரஜினிகாந்த் உடன் குருமூர்த்தி பேசப்பட்ட விஷயம். ஓபனாக ரஜினி சொன்னாரா. இதனை தெளிவுபடுத்த வேண்டியது ரஜினிதான். அவர் பொது வெளியில் இந்த கருத்தை சொல்லட்டும் நான் சொல்றேன். அண்ணாமலையின் முதல்வர் கனவு என்பது இலவு காத்த கிளி போல தான். 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் தான் தமிழகத்தில் ஆட்சி மலரும். அவர் சொல்லிட்டார் இவர் சொல்லிட்டார் என்றாலும் அண்ணாமலையின் முதல்வர் கனவு என்பது நடக்காத விஷயம் என தனது விமர்சனத்தை நேற்று ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் முன்வைத்து இருந்தார்.

அண்ணாமலை நோக்கம் :

ஜெயக்குமார் கூறிய விமர்சனத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் செய்தியாளர்களிடம் தனது பதிலை கூறினார். அவர் கூறுகையில், அண்ணாமலைக்கு(தனக்கு) முதல்வர் கனவு இல்லை. என்னுடைய நோக்கம் என்பது கட்சியை வளர்க்கணும். பல தலைவர்களை உருவாக்கனும் என்பது மட்டுமே.

துக்ளக் விழாவில் நானும் இருந்தேன். காங்கிரஸ் எம்பி சசிதரூரும் இருந்தார். குருமூர்த்தி அவர் கருத்தை கூறினார். பாஜகவை குற்றம் சொல்லும் அருகதை இங்கு எந்த கட்சிக்கும் இல்லை. பாஜகவில் என்னைவிட தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்காங்க. நான் சவால் விடுகிறேன் உங்கள் கட்சியில் இது போல ஆட்கள் இருக்கிறார்களா.?

முதல்வர் தகுதி :

பாஜகவில் 15-20 பேர் முதல்வர் வேட்பாளர் தகுதியோடு இருக்கிறார்கள். அவர்களை அப்படி சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். எங்களிடம் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். இதனை புரியாதவர்கள் நிறைய பேர் இருக்காங்க. ஒரு தலைவரை கூறி அவரை சுற்றி வரும் கட்சி பாஜக இல்லை.  உங்களிடம் (அதிமுக) 1 கோடி தொண்டர்கள் உள்ளார்கள் என கூறுகிறீர்கள் . அதில் ஒரு தலைவர் தான் இருக்கிறாரா.? 2 , 3 தலைவர்கள் கூட இல்லையா என ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு தனது பதிலடியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்