3 மாத உயர் படிப்பு., இங்கிலாந்து புறப்படுகிறேன்.! அறிவித்தார் அண்ணாமலை.!
சென்னை : லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் படிக்க உள்ளதாகவும், அதற்காக இன்று இரவு வெளிநாடு செல்ல உள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும் அதனால் 3 மாதங்கள் அரசியலில் இருந்து சிறிய இடைவெளி எடுக்கப்போவதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகி வந்தன. அதனை இன்று அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,” லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இன்று இரவு இங்கிலாந்து செல்கிறேன். நான் வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றாலும், என் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். ‘
நான் வெளிநாடு சென்றாலும், ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன். இந்த அரசியல் சண்டை தொடரும். பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்க உள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிராமங்களை நோக்கி நங்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். பாஜக தரும் அலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து, உறுப்பினராக இணையலாம்.” என்று தனது வெளிநாட்டு பயணம் பற்றியும் அதன் பிறகான பாஜக செயல்பாடு குறித்தும் அண்ணாமலை பேசினார் .
இதே செய்தியாளர் சந்திப்பில், “முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே மேற்கொண்ட வெளிநாடு பயணங்கள் தோல்வியில் தான் முடிவடைந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனத்தை திரும்பப்பெற மாட்டேன்.” என்று அரசியல் தலைவர்கள் மீதான தனது விமர்சனங்களையும் முன்வைத்தார் அண்ணாமலை.