அண்ணாமலை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜூன் 1 ( இன்று) காலை திருவண்ணாமலையில் இருக்கும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வருகை தந்தார். சுவாமி தரிசனம் முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது போலீஸ் அதிகாரிகள் ஓய்வு பெறும் கடைசி நாளில் சஸ்பெண்டு செய்யப்படுவது குறித்தும், பிரதமர் மோடி தியானம் செய்ய கன்னியாக்குமரிக்கு சென்றது பற்றியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி இறுதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது பற்றியும் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை ” பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆகவேடண்டும், தமிழக மக்கள் நன்றாக நலமுடன் இருக்கவேண்டும் என்று வேண்டி கோவிலுக்கு வந்தேன். போலீஸ் அதிகாரிகள் ஓய்வு பெறும் கடைசி நாளில் அவர்களை சஸ்பெண்டு செய்வது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டும் தான் காரணம். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டுள்ளது. எனக்கு இதனை பற்றி முழு விவரம் தெரியாது. ஆனால், நீதிமன்றம் இதனை பார்த்துக்கொள்ளும்” என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஜூன் 1 இன்று இந்தியா கூட்டணி இறுதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கடைசியில் அந்த கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போகவில்லை. எந்த கட்சியும் போகவில்லை கட்சியினுடைய இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டும் போயிருக்கிறார்கள். அதைப்போல, காங்கிரஸ் கட்சியில் இருந்து “Exit Poll-க்கு தனது செய்தி தொடர்பாளர்களை அனுப்ப மாட்டோம் என்று அறிக்கை விடுகிறது. இதில் இருந்து என்ன தெரிகிறது? இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 543 தொகுதிகளும் யார் பக்கம் செல்லும் என மக்களுக்கு தெரியும்.
ஆனால் அதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியா கூட்டணி இறுதி ஆலோசனை கூட்டத்திற்கு ஸ்டாலின் போறேன் என்று சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் போகவில்லை. ஏனென்றால், அவர்களுக்கும் தெரியும். தேர்தல் நடக்கும் வரை மட்டும் தான் அவர்களால் நாடகம் நடத்த முடியும். தேர்தல் நடந்து முடிந்த பிறகு எல்லோருக்கும் தெரியும் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தான் ஆட்சி அமைக்க போகிறார் என்று. பிரதமர் மோடி தனிப்பட்ட வகையில் கன்னியாகுமரி வந்து இருக்கிறார். அவருடன் பாஜக கட்சியின் தொண்டர் ஒருவர் கூட வரவில்லை.
கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறைக்கு செல்லவேண்டும் என்றால் அரசின் அனுமதியோ அல்லது தேர்தல் ஆணையத்தின் அனுமதியோ வேண்டும் என்று இல்லை. பிரதமர் மோடி தியானம் செய்ய விவேகானந்தர் பாறைக்கு வந்த காரணத்தால் அங்கு இருந்த மக்கள் தடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் எதனை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் பிரதமர் மோடியின் தியானம் செய்வது குறித்து விஷமத்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்” எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…