சற்று முன்…ஊழல் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை;அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி பதில்!

Default Image

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்ததில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.அந்த வகையில , திமுக அரசின் இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை இரு தினங்களில் வெளியிட உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அமைச்சர் விளக்கம் 

இந்நிலையில்,கர்ப்பிணிகளுக்கான கிட்டில் இரு பொருட்களை தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும்,இது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:”கர்ப்பிணிகளுக்கான கிட்டில் இரு பொருட்களை தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக,ஹெல்த் மிக்சை ஆவினிடம் வாங்குவதுக்கு பதிலாக தனியாரிடம் வாங்கியதால் அரசுக்கு ரூ.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் தர வேண்டும்.

அதைப்போல,அனிதா டெக்ஸ் காட் நிறுவனத்திற்கு அரசு தந்த ரூ.450 கோடி ஒப்பந்தத்தில் ரூ.100 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது.மேலும்,ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக சென்னை சிடிஎம்ஏ(CDMA) ஆக மாறி வருகிறது.ஏனெனில்,பொதுவாக நிலம் அப்ரூவல் பெற 200 நாட்கள் ஆகும் நிலையில்,ஜி ஸ்கொயர்,கோவையில் 122 ஏக்கருக்கான லே அவுட்டை வழக்கத்தை விட 6 நாட்களிலேயே பெற்றுள்ளனர்.இதில் திமுக ஆடிட்டர் சண்முகசுந்தரம் சம்மந்தப்பட்டுள்ளார்.

ஆன்லைன் வழியாக மட்டுமே நிலத்துக்கு அப்ரூவல்:

மேலும்,தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் வந்தவுடன், ஆன்லைன் வழியாக மட்டுமே நிலத்துக்கு அப்ரூவல் வழங்கப்படும் என ஒரு அரசாணை வெளியிடப்பட்டது.அதன்படி,எப்போதெல்லாம் அப்ரூவலுக்கு ஆவணங்களை ஜி ஸ்கொயர் சமர்ப்பிக்கின்றனரோ அதற்கு ஒரு மணி நேரம் முன்னரே அரசின் லிங்க் ஓபன் ஆகும்.பின்னர், ஜி ஸ்கொயர் ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த லிங்க் இயங்காது.இது குறித்து வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி இதற்கு பதில் அளிக்க வேண்டும்.ஜூன் 20-க்கு பின் திமுக அரசு மீதான ஊழல் புகார்களை தமிழக ஆளுநரிடம் வழங்குவோம்.” என தெரிவித்துள்ளார்.

டெண்டர் விடுவதற்கு முன்பே ஊழலா?:

இந்நிலையில்,அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன்:”கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து கலவை வழங்குவதற்கான டெண்டர் விடுவதற்கு முன்பே ஊழல் நடைபெற்றுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.டெண்டர் பணிகள் முடியும் முன்னரே ஊழல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதற்குள் அதில் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது என்று கூறுவது நியாயமில்லை. டெண்டர் விட்டு இறுதியாகி அதை யாருக்காவது கொடுத்து இழப்பு ஏற்பட்டிருந்தால் இவ்வாறு அவர் கூறியிருக்கலாம்.மாறாக,டெண்டர் இன்னும் இறுதியாகாத சூழலில்,பைனான்சியல் பிட் இன்னும் இரு நாட்கள் கழித்துதான் ஓபன் ஆகும்.எனவே,எந்த நிறுவனத்திற்கு கொடுத்தால் லாபம் வரும் என்பது குறித்து அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும்.மேலும்,டெண்டர் இறுதியாகி விட்டதா? என்றும் அவர் கூறவேண்டும்.

மற்ற துறைகளில் ஊழல்;உண்மை இல்லை:

குறிப்பாக,எந்த நிறுவனத்திற்கு கொடுத்து எவ்வளவு இழப்பு என்று அண்ணாமலை பதில் அளிக்க வேண்டும்.அவ்வாறு இருந்தால் தவறு நடவடிக்கை எடுக்கப்படும்.ஆனால்,இன்னும் டெண்டர் இறுதியாகபோது இவ்வாறு கூறுவது நியாயமில்லாத ஒன்று.இதனால்,மற்ற துறைகளில் ஊழல் என்றாலும் அதில் உண்மை இருக்காது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிவிட்டது”,என்று விளக்கம் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்