“9 மணிநேரத்தில் 10 லட்சத்தை கடந்துவிட்டோம்.,” #GetOutStalin – அண்ணாமலை பதிவு!

காலை 6 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட GetOutStalin டிவீட் தற்போது 10 லட்சம் (1 மில்லியன்) பதிவுகளை கடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

BJP State presisident Annamalai - GetOutStalin

சென்னை :  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை குறிப்பிட்டு இனி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் Go Back மோடி என சொல்ல மாட்டார்கள் Get Out Modi என்று சொல்வார்கள் என கூறியிருந்தார். இதனை அடுத்து #GetOutModi எனும் ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

இதனை குறிப்பிட்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை குறிப்பிட்டு இன்று காலை 6 மணிக்கு தான் #GetOutStalin என பதிவிட போவதாகவும், இதனை பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் எக்ஸ் தள பக்கத்தில் ட்ரெண்ட் செய்வார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அதேபோல, இன்று காலை 6 மணிக்கு #GetOutStalin என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மேலும், ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுவது, பெருகிவரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியல்,  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என அனைத்திற்கும் மேலாக, தமிழகத்தில் உள்ள இந்த திமுக தலைமையிலான அரசை விரைவில் மக்கள்  வெளியேற்றம் செய்யப்படுவார்கள் .” என  பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவு கடந்த 9 மணிநேரத்தில் 10 லட்சம் (1 மில்லியன்) பதிவுகளை இட்டுள்ளனர் என பாஜகவினர் பதிவு செய்த எக்ஸ் தள பதிவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறுபதிவு இட்டுள்ளார்.

மேலும் தனது பதவியில் குறிப்பிட்ட அண்ணாமலை, ” தமிழக மக்கள் குரல் எழுப்புகிறார்கள்! ஒருபக்கம் அவர்கள் நமது பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலைப் பார்க்கிறார்கள். மறுபுறம், திமுக அரசின் கொடூரமான ஆட்சி, தமிழகத்தை இருள் சூழ்ந்த காலத்திற்கு தள்ளியுள்ளது என்பதையும் பார்க்கிறார்கள். 2026 ஆம் ஆண்டிற்குள் மு.க.ஸ்டாலின் ஆட்சியை பதவி நீக்கம் செய்யும்.” என்றும் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்