அண்ணாமலை உயிருக்கு ஆபத்து..? Y+ பாதுகாப்பு..!
தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலைக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த அவருக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அண்ணாமலை தமிழக தேர்தலை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மதவாத போராளிகளாலும், மாவோயிஸ்டுகளாலும் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவருக்கு மதவாத போராளிகளாலும், மாவோயிஸ்டுகளாலும் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் மாநில பாதுகாப்பு மறுபரிசீலனை குழு ஒய்பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.
இது குறித்து கூறிய பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, பாதுகாப்பு தொடர்பாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். எனது உயிருக்கு ஆபத்து இருப்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்தார்.