தமிழ்நாட்டுக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல, அரசியல் மாற்றம் என்று பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கருத்து.
தமிழகத்துக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல, அரசியலில் மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்க தான் தன் ஐபிஎஸ் பதவியை விட்டுட்டு தமிழகத்துக்கு வந்தவர் தலைவர் அண்ணாமலை. ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கனவு. அரசியல் மாற்றத்துக்காகவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணியாற்றி வருவதாகவும், ஊழலை ஓரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, சென்னை அமைந்தகரையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என்றும் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார். அதிமுக உடனான கூட்டணி வேண்டாம் என அண்ணாமலை பேசியிருப்பதால் பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக உடனான கூட்டணி தொடர்பாக பாஜகவில் நிலவும் இருவேறு நிலைப்பாடுகளால் தமிழக பாஜகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…