இதற்காக தான் அண்ணாமலை பணியாற்றி வருகிறார் – அமர்பிரசாத் ரெட்டி

Default Image

தமிழ்நாட்டுக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல, அரசியல் மாற்றம் என்று பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கருத்து. 

தமிழகத்துக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல, அரசியலில் மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்க தான் தன் ஐபிஎஸ் பதவியை விட்டுட்டு தமிழகத்துக்கு வந்தவர் தலைவர் அண்ணாமலை. ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கனவு. அரசியல் மாற்றத்துக்காகவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணியாற்றி வருவதாகவும், ஊழலை ஓரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, சென்னை அமைந்தகரையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என்றும்  தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார். அதிமுக உடனான கூட்டணி வேண்டாம் என அண்ணாமலை பேசியிருப்பதால் பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக உடனான கூட்டணி தொடர்பாக பாஜகவில் நிலவும் இருவேறு நிலைப்பாடுகளால் தமிழக பாஜகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்