சனாதன விவகாரத்தை அரசியலாக்குகிறார் அண்ணாமலை – அமைச்சர் உதயநிதி தரப்பு வாதம்!

udhayanidhi stalin

கடந்த செப்.1ம் தேதி சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் “சனாதன ஒழிப்பு மாநாடு ” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, திமுக எம்பி ஆராசா, திராவிடர் கழகம் தலைவர் கீ.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த நிகழ்ச்சிக்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என வைக்காமல், சனாதன ஒழிப்பு மாநாடு என சரியாக வைத்துள்ளீர்கள் அதற்கு பாராட்டுக்கள்.

ஏனென்றால் சனாதானம் என்பது டெங்கு , மலேரியா, கொரோனா போன்று ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தார். அமைச்சர் உதயநிதியின் பேச்சு நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியது. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் மத்தியில் பெரும் எதிர்ப்பலைகளை உண்டாக்கியது. அதுவும் உதயநிதி தலைக்கு விலை வைக்கும் அளவுக்கு பரபரப்பாக காணப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இந்த விவகாரம் தொடர்பாக காவல்நிலைத்தில் புகார்கள், நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ப்பட்டன.

எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்.! விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு.!

இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானம் குறித்து விமர்சித்து பேசியுள்ளார். அப்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மேடையில் இருக்கிறார். ஒரு மதத்தை பற்றி இழிவாக பேசிவிட்டு எப்படி அமைச்சராக தொடர முடியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சனாதன தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, சனாதன விவகாரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலாக்குகிறார். சனாதன பேச்சு தொடர்பாக ஆதாரங்களை சமர்பிக்காததால் கோ வாரண்டோ வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் ஆதாரங்களை கேட்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது.

மனுதாரர்கள் தான் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. எனவே, ஆதாரங்களை சமர்பிக்காவிடில் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.  இதையடுத்து, அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்