கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் 40க்கும் மேற்பட்ட அணைகள் கட்டப்பட்டன என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி காலத்தில் 5 அணைகள் மட்டுமே கட்டியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி மீது தவறான குற்றசாட்டை சுமத்திய அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். காமராஜர் ஆட்சி காலத்தில் கிருஷ்ணகிரி அணை, சாத்தனுர் அணை, மணிமுத்தாறு அணை கட்டப்பட்டது என்பதில் மாற்று கருத்து இல்லை.
தமிழ்நாட்டை ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தை பாதுகாக்க 12 அணைகளை கட்டினார். ஆனால், ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திமுக 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது என்று ஒரு தவறான குற்றச்சாட்டை அண்ணாமலை சுமத்தி இருக்கிறார். திமுக ஆட்சியில் 5 அணைகள் மட்டுமே கட்டப்பட்டது என அண்ணாமலை சொன்னது ஜமக்காலத்தில் வடிகட்டிய பொய் எனவும் விமர்சித்தார்.
40 அணைகளுக்கு மேல் கட்டி புகழ்பெற்றவர் கலைஞர். நம்பியாறு, பொய்கையாறு, கடனா நதி, பாலாறு அணை, பொருந்தலாறு அணை, மருதாநதி அணை, பரப்பலாறு அணை, மோர்தானா அணை, அடவிநயினார் அணை உள்ளிட்டவைகள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என தெரிவித்தார்.
எனவே, நித்தம் நித்தம் இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்திகளை பேசி வம்பில் மாட்டிக் கொள்வதை நண்பர் அண்ணாமலை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்று தான் இந்த தவறான குற்றச்சாட்டு. குற்றம் சொல்வதற்கு முன் அது உண்மையா என்பதை பரிசீலினை செய்து பார்க்க வேண்டும் எனவும் அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
அண்மையில் அண்ணாமலை பேசுகையில், காமராஜருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் விவசாயத்துக்கு எதுவும் செய்யவில்லை. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஒன்பது ஆண்டுகளில் 12 அணை கட்டினார். காமராஜர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் அதிக காலம் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக, திமுக. திமுக இன்று ஆறாவது முறையாக ஆட்சியில் இருக்கிறது. கொங்கு பகுதியில் உள்ள 24 அணைகளில், திமுக கட்டியது வெறும் 5 அணைகள் என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…