பச்சோந்தியைப் போல் தினம்தோறும் மாறிக்கொண்டிருக்கிற ஒரு மனிதர்தான் அண்ணாமலை..! ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி..!

EVKSElangovanInterview

பச்சோந்தியைப் போல் தினம்தோறும் மாறிக்கொண்டிருக்கிற ஒரு மனிதர்தான் அண்ணாமலை என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டியளித்துள்ளார்.

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கியிருக்கிறார்.

இந்த பாதயாத்திரையை மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்நிலையில், அண்ணாமலை பாதயாத்திரை சென்றிருப்பதைக் குறித்து ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்து பேட்டியளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், அண்ணாமலை யாத்திரை ஆரம்பித்திருக்கிறார். பொதுவாக எல்லோருமே கடைசியில் யாத்திரை செல்வார்கள். அது போல தான் அண்ணாமலை பாஜகவிற்கு சாவு மணி அடிப்பதற்காக யாத்திரை தொடங்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சொல்லியது போல, இது ஒரு பாவ யாத்திரை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், மணிப்பூரில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அதை எல்லாம் நாட்டின் பிரதமராக இருக்கிற நம்முடைய மோடி அதை சென்று பார்க்காமல் வெளிநாடுகளுக்கு சென்று எல்லா அதிபர்களையும் கட்டிப்பிடித்து கொள்கிறார்.

அவர் செய்கிற ஒரே வேலை அதுதான். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மைகள் செய்யாமல் ஆறுதல் கூறாமல் சென்று வெளிநாடுகளுக்கு சென்று வெளிநாட்டு தலைவர்களை கட்டிப்பிடிப்பதிலேயே தன்னுடைய பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார். ஆகவே, பிரதமர் மோடியின் இந்த அரசு கண்டிப்பாக தூக்கி எறியப்பட வேண்டிய ஒரு அரசு என்பது சொல்லிக் கொள்கிறேன் எனக் கூறினார்

மேலும், அம்மா ஜெயலலிதாவை பற்றி அவருடைய ஆட்சியை நன்றாக இருக்கிறீர்கள் அண்ணாமலை இப்போது சொல்கிறார். ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பாக ஜெயலலிதா ஊழல் பேர்வழி என்று சொன்னவரும் இதே அண்ணாமலை தான். ஆகவே அவரை பொறுத்தவரை நிரந்தரமாக ஒரு கருத்து கிடையாது.

பச்சோந்தியை போல தினம் தோறும் மாறிக்கொண்டிருக்கும் ஒரு மனிதர் தான் அண்ணாமலை. பாதயாத்திரை சென்று அவர் நேரத்தை வீணடிப்பதை விட குற்றாலத்திற்கு சென்று ஒரு மாதம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அவர் திருந்துவார் என்று நினைக்கிறேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்