‘அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர்’ – பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்..!
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காததற்காக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த மனதுடன் எடுத்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
மோடி ஜி நீங்கள் சிறப்பு, நீங்கள் தேசத்தின் தந்தை, நீங்கள் எப்போதும் என் விஸ்வகுரு மற்றும் சிறந்த தலைவர். அமித்ஷா ஜி நீங்கள் எப்போதும் என் சாணக்கிய குருவாக இருப்பீர்கள்.
நான் இந்த முடிவை அவசரமாக எடுக்க காரணம் அண்ணாமலைதான். அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர்.
அனைத்து வீடியோ மற்றும் ஆடியோஆதாரத்துடன் போலீசில் புகார் கொடுக்க தயாராக இருக்கிறேன். மேலும் அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.