அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு! பாதயாத்திரை மீண்டும் ஒத்திவைப்பதாக பாஜக அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பாஜக அறிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே அமைய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் பாதயாத்திரை தமிழகம் முழுவதும்  மேற்கொண்டு வருகிறார்.

இந்த நடைபயணம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த முதல்கட்ட ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களை கடந்து ஆகஸ்ட் 22ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்தார்.

இதன்பின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் 2ம் கட்டத்தை கடந்த மாதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தொடங்கினார். அதன்படி, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லுார், தேனி, திண்டுக்கல், திருப்பூர். கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் 28ம் தேதி வரை என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, சில நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு நிறுத்தப்பட்டது, மூன்றாவது கட்டமாக அக்டோபர் 4-ம் தேதி மீண்டும் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட நடைபயணம் வரும் 6-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல், அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு அண்ணாமலை தலைமையில் நேற்று நடைபெற இருந்த பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் மூன்றாம் கட்ட நடைபயணம் வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பாஜக அறிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், நடைபயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இருமல், தொண்டை வலி, உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றால் அண்ணாமலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலை மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்ததால் நடைபயணம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப். இறுதியில் கோவையில் தொடங்கவிருந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறும் எனவும் பாஜக அறிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

1 hour ago

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

2 hours ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

2 hours ago

ஹெட் விக்கெட் எடுக்கிறது ஈசி இல்லை கண்ணா! இந்தியாவுக்கு சவால் விட்ட ஸ்டிவ் ஸ்மித்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…

2 hours ago

சீமான் விவகாரம் : இதுதான் கடைசி? “எனக்கு எந்த நியாயமும் கிடைக்கல.,”  விஜயலட்சுமி பரபரப்பு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…

4 hours ago

2026-ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…

4 hours ago