“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!
பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது, இனி களத்தில் தீவிரமாக செயல்பட போகிறேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோரது பெயர்கள் இருக்கின்றன என்றும், அண்ணாமலைக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்படும் என்றும் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.
இப்படியான சூழலில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாநிலத் தலைவர் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அதில், ” தமிழ்நாட்டு மக்களுக்காக நான் போராடிக்கொண்டிருக்கிறேன். போராடுவேன் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நான் செருப்பு போடாமல் நின்று கொண்டிருக்கிறேன். நான் செருப்பு அணிந்து 4 மாதம் ஆகிறது. திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை தமிழ்நாட்டில் இருந்து தூக்கி எரிய வேண்டும் என களத்தில் இருந்து போராட போகின்றேன். இனி எந்நேரம் முழுவதுமே களத்தில் இருக்க போகிறேது. இனி அதிகமாக பயணம் செய்ய போகிறேன்.
மாநிலத் தலைவர் எனும் பணிகள் எனக்கு இருக்காது. அது எனக்கு சந்தோசம் தான். அமைப்பு ரீதியான பணிகளை வேறு ஒருவர் செய்யட்டும். அதனால் தான் மாநிலத் தலைவர் எனும் போட்டியில் நான் இல்லை எனும் அர்த்தத்தில் நான் சொன்னேன். காரணம் நான் களத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறன். தொண்டர்கள் யாராக இருந்தாலும் அவர்களோடு சேர்ந்து இந்த போராட்டம் இருக்கும். தலைவர் பதவி இருக்கிறது என்பதால் ஒருவரை அடையாள படுத்த வேண்டும் என்ற அவசியம் இங்கு இல்லை.
பதவிவிகள் வரும் போகும். அதனால் எல்லோரும் இன்னும் வேகமாக விறுவிறுப்பாக களத்தில் போராட வேண்டும். என பாஜக தொண்டர்கள் அனைவரையும் நான் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். மக்களோடு நான் போராடுவேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.