“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!
அரசியல் கட்சித் தலைவரக சீமானை பார்ப்பதை விட ஒரு போர்களத்தில் இருக்கும் தளபதியாக தான் நான் பார்க்கிறேன் என அண்ணாமலை பேசியுள்ளார்.

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியின் இறுதி சுற்று நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரு அரசியல் தலைவர்களும் ஒன்றாக கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்வு என்பதால் இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டி பேசியுள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், ” சீமான் அண்ணனை அரசியல் கட்சித் தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் என சொல்வதை விட ஒரு போர்களத்தில் இருக்கும் தளபதியாக தான் நான் அண்ணன் சீமான் அவர்களை பார்க்கிறேன் . காரணம் அவர் கொண்டுள்ள கொள்கை. அந்த கொள்கையில் அவர் வைத்துள்ள உறுதியான நிலைப்பாடு. அதற்காக எதனை இழந்தாலும் தைரியமாக போராடக்கூடிய மாண்பு.
இதனால் தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக நின்று கொண்டிருக்கிறார். எனக்கும், சீமான் அண்ணனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். அண்ணன் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். அவ்ளோதான் வித்தியாயசம். இருந்தும் எப்போதும் அண்ணன் சீமான் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதற்கான காரணம், தமிழக அரசியலில் நேர்மையும், நெஞ்சுறுதியும் கொண்ட தலைவர் சீமான்.
நானும், அண்ணன் சீமான் அவர்களும் முதன் முறையாக ஒரே மேடையில் கலந்து கொள்ளும் நிகழ்வு இது. அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ” எனக் பேசினார்.