கோவை சம்பவத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருந்துவிட்டதாக பாஜக காண்பிக்க முயற்சி செய்கின்றது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பெட்டியில், ‘இந்தி திணிப்பு செய்யப்படுகிறது என்பது ஊரறிந்த, உலகறிந்த உண்மை; நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றிவிட்டனர். 70% மாற்றிவிட்டோம் என பெருமை பேசுகின்றனர்.
அதிகம் இந்தி பேசுபவர்கள் இருக்கும் மாநிலங்களில் இம்முடிவை எடுக்கலாம். மற்ற மாநிலங்களில் இந்தி திணிப்பை ஏற்கமுடியாது; இது ஐனநாயகத்திற்கு எதிரானது. இந்தியை மத்திய அரசு திணிக்கிறது. ஆங்கிலத்தை யார் திணிக்கிறார்கள்? இது வேடிக்கையாக உள்ளது; இந்தியை திணிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாக உள்ளது. அதை எதிர்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், கோவை சம்பவத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருந்துவிட்டதாக பாஜக காண்பிக்க முயற்சி செய்கின்றது. அரசியலை அரசியலாக எதிர்கொள்ள வேண்டும்! தனிநபர் பெயர் உச்சரித்து விமர்சனம் செய்வது அரசியல் அநாகரீகமானது. அண்ணாமலைக்கு விளம்பரமேனியா என்னும் நோய் உள்ளது என விமர்சித்துள்ளார்.
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…