அண்ணாமலைக்கு விளம்பரமேனியா என்னும் நோய் உள்ளது – திருமாவளவன்

Default Image

கோவை சம்பவத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருந்துவிட்டதாக பாஜக காண்பிக்க முயற்சி செய்கின்றது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பெட்டியில், ‘இந்தி திணிப்பு செய்யப்படுகிறது என்பது ஊரறிந்த, உலகறிந்த உண்மை; நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றிவிட்டனர். 70% மாற்றிவிட்டோம் என பெருமை பேசுகின்றனர்.

அதிகம் இந்தி பேசுபவர்கள் இருக்கும் மாநிலங்களில் இம்முடிவை எடுக்கலாம். மற்ற மாநிலங்களில் இந்தி திணிப்பை ஏற்கமுடியாது; இது ஐனநாயகத்திற்கு எதிரானது. இந்தியை மத்திய அரசு திணிக்கிறது. ஆங்கிலத்தை யார் திணிக்கிறார்கள்? இது வேடிக்கையாக உள்ளது; இந்தியை திணிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கையாக உள்ளது. அதை எதிர்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், கோவை சம்பவத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருந்துவிட்டதாக பாஜக காண்பிக்க முயற்சி செய்கின்றது.  அரசியலை அரசியலாக எதிர்கொள்ள வேண்டும்! தனிநபர் பெயர் உச்சரித்து விமர்சனம் செய்வது அரசியல் அநாகரீகமானது. அண்ணாமலைக்கு விளம்பரமேனியா என்னும் நோய் உள்ளது என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்