திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியல் குறித்து பேசுவதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது என மாணிக்கம் தாகூர் எம்.பி பேச்சு.
விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் அவர்கள் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஈரோடு தேர்தல் வெற்றி என்பது தமிழக அரசின் வெற்றி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் வெற்றி .
அதிமுகவின் தோல்வி என்பது அதிமுக மக்களுடைய நம்பிக்கை என்றும் பெற முடியாது என்பதற்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டு . பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்துவார்கள் என தெரிவித்து விட்டு தற்போது தேர்தல் ஆணையத்தின் மீது குறை சொல்வது மத்திய அமைச்சர் அமித்ஷாவை குறை சொல்வதற்கு சமம்.
அண்ணாமலை ஈரோட்டில் அதிமுகவிற்கு தோல்வியை பெற்று தந்தது போல, கர்நாடகாவிலும் பாஜகவிற்கு தோல்வியையும், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியையும் பெற்று தருவார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியல் குறித்து பேசுவதற்கு பாஜக மாநிலத்தில் அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…