ஊழல், லஞ்சம் குறித்து தமிழக முதல்வரிடம் கேள்வி கேட்க அண்ணாமலைக்கு உரிமை இல்லை – சீமான் அதிரடி
ஊழல், லஞ்சம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கேள்வி கேட்க அதிகாரமில்லை என சீமான் பேட்டி.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஊழல், லஞ்சம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கேள்வி கேட்க அதிகாரமில்லை. எனக்கு கேள்வி கேட்கிற உரிமையும், தகுதியும் உள்ளது நான் கேட்கிறேன்.
கடந்த ஓராண்டில் திமுக அரசு எதையும் செய்யவில்லை என சொல்லிவரும் பாஜக, கடந்த 8 ஆண்டுகளில் என்ன சாதித்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று சொன்னார்கள், ஆனால் இணைக்கு தெருக்கோடியில் தான் நிற்கிறார்கள். அதானி, அம்பானியை உலக பணக்காரர்களாக மாற்றியதை தவிர பாஜக எந்த சாதனையும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.