இபிஎஸ்-க்கும் S.P.வேலுமணிக்கும் உள்கட்சி பிரச்சனை.! அண்ணாமலை பரபரப்பு.!
கோவை: மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்து உள்ளது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக, பாஜக கூட்டணி தொடர்ந்து இருந்தால் எப்படியும் 30 தொகுதிகள் வென்று இருப்போம் எனவும், அண்ணாமலை தான் அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம் என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.
இதனை அடுத்து, கோவை விமான நிலையத்தில் சேத்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 2019 தேர்தல் சமயத்தில் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தது. அப்போது அதிமுக ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. அப்படி இருந்த அதிமுக இப்போது எங்களோடு கூட்டணி வைத்து இருந்தால் 30 சீட் வென்று இருக்க முடியும் என கூறுகிறார் எஸ்.பி.வேலுமணி.
எஸ்.பி.வேலுமணிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உள்கட்சி பிரச்சனை இருப்பது போல தெரிகிறது. கட்சிக்குள் ஏதோ பிரச்சனை இருக்கிறது. ஏனென்றால் முன்பு, நிர்பந்திக்கப்பட்டு சில மசோதாக்களுக்கு ஆதரவளித்தோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். எஸ்.பி.வேலுமணி இன்று இப்படி கூறுகிறார்.
அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது ஒரு கட்சி ஜெய்க்கவில்லை. 2021இல் அதிமுக டெபாசிட்டை கூட பல இடங்களில் இழந்துள்ளனர். 2021 தேர்தல் முடிவு சொல்லும் செய்தி என்னவென்றால், அதிமுக தலைவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளனர். கூட்டணியில் இருக்கும் போது ஒரு பேச்சு. கூட்டணியில் இருந்து வெளியே வந்தவுடன் ஒரு பேச்சு. கோயம்புத்தூரில் 3 எம்.எல்.ஏ கீழே வைத்துக்கொண்டு டெபாசிட் இழந்துள்ளது அதிமுக என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.