தவறு நடந்தால்., அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்.! கண்டிப்புடன் கூறிய அண்ணாமலை.!

BJP State President K Annamalai

அண்ணாமலை: உடுப்பியில் எஸ்.பியாக பொறுப்பேற்ற போது தனது கட்டுப்பாடிற்குள்  தவறு நடந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியிருந்தேன் என்று அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மிக தீவிரமாக அரசியல் களத்தில் ஈடுப்பட்ட வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தலுக்கு பின்னர் தற்போது முதன் முறையாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். PTI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அண்ணாமலை அரசியல் களம் தாண்டி தனது காவல்துறை பணி அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.

அப்படி அவர் கூறுகையில், உடுப்பியில் அண்ணாமலை மாவட்ட எஸ்.பியாக முதன்முதலாக பணியாற்றிய தொடங்கிய போது, குறிப்பிட்ட நேரத்தில் சில முக்கிய விஷயங்களை நாங்கள் செய்தோம் என குறிப்பிட்டார். உடுப்பி எஸ்பியாக தான் பொறுப்பேற்பதற்கு முன்பு, அங்கு ஒரு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதனால் அந்த சமயம் நாங்கள் அங்குள்ள காவல் நிலையத்தின் மொத்த அதிகாரிகளையும் இடமாற்றம் வேண்டி இருந்தது. அது நான் பொறுப்பேற்ற சமயம் ஆகும்.

அதன் பிறகு தனது பொறுப்பில் உடுப்பி மாவட்டம் இருக்கும் சமயத்தில் ஏதாவது தவறு நடந்தால், தொடர்புடைய அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடுமையாக உத்தரவிட்டேன் என்றும்,  அடுத்து மாவட்டத்தில் உள்ள 14-15 லட்சம் மக்களின் பாதுகாவலர்களாக நாம் செயல்பட வேண்டும் என்று கூறி, நாங்கள் மிகவும் வலிமையாகவும் ஆக்ரோஷமாகவும் செயல்பட்டோம் என்று உடுப்பு மாவட்ட எஸ்பியாக இருந்த சமயத்தில் தனது அனுபவங்களை PTI நேர்காணலில் பகிர்ந்து கொண்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்