சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தன்னை தொடர்பு படுத்தி ஆர்.எஸ்.பாரதி (திமுக) விமர்சித்ததால் அவர் மீது அண்ணாமலை (பாஜக) அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கள்ளக்குறிச்சில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விஷச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என விமர்சனம் செய்து இருந்தார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனை தொடர்ந்து இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மானநஷ்டஈடு வழக்கு பதிந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜூன் 23ஆம் தேதி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து என்மீது அவதூறு விளைவிக்கும் வகையில் பேசினார். நான் அரசியலுக்கு வந்த 3 ஆண்டுகளில் யார் மீதும் அவதூறு வழக்கு தொடரவில்லை. ஆனால் தற்போது இவர்கள் பேசிவருவதை பார்க்கையில், வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.
ஆர்.எஸ்.பாரதி மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதிக்கு நீதிமன்ற சம்மன் அனுப்பப்படும். ஆளும் கட்சியாக உள்ள திமுகவை யாரும் எதிர்ப்பது கிடையாது. ஆனால், நங்கள் திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதியை இந்த வழக்கில் சிறைக்கு அனுப்ப போகிறோம்.
அவரிடம் இருந்து நஷ்டஈடு பெற்று மதுவினால் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அமைக்கப்படும் என எங்கள் வழக்கில் குறிப்பிட்டுள்ளோம். 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்.எஸ்.பாரதி என்னை ” சின்னப்பையன்” என்று விமர்சித்தார். இந்த சின்ன பையன் இந்த வழக்கை வைத்து திமுகவையும், ஆர்.எஸ்.பாரதியையும் என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.
படிப்பு நாங்க போட்ட பிச்சை என்பது, பி.ஏ படித்தவர்களை நாய் என்று கூறுவது. ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சுக்கு தான் நாங்கள் வழக்கு போட்டுள்ளோம். இந்த வழக்கை எங்கள் வழக்கறிஞர் பால் கனகராஜ் பதிவு செய்துள்ளார் என்று செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…