வெள்ள மீட்புப்பணிகள்.! மத்திய குழு கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது… அண்ணாமலை கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு சார்பில் நிவாரண உதவிகள் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு மத்திய குழு தமிழகம் வந்து ஆய்வு செய்து தமிழக அரசு வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை நல்ல முறையில் மேற்கொண்டதாக குறிப்பிட்டனர். இதனை அண்மையில் ஒரு தனியார் செய்தி நிறுவன பேட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

சென்னை வெள்ள நிவாரண பணிகள், மீட்பு பணிகள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.  அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை கொடுக்க வேண்டம். ஏற்கனவே மத்திய அரசு 450 , 450 என மொத்தம் 900 கோடி ரூபாயை உடனடி நிவாரண தொகையாக கொடுத்துள்ளது. மாநில அரசு 300 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. இதில் மாநில அரசு 25 சதவீத பங்கும், மத்திய அரசு 75 சதவீத பங்கும் கொண்டுள்ளது.

அரசியலில் பெண்கள் இருப்பது மிகப்பெரிய சவால்…! அதற்கு உதாரணம் இவர்தான்..! – பிரேமலதா

2 நாள் பாதிக்கப்பட்டு இருந்தாலே குறைந்தது 5,400 ரூபாய் நிவாரணம் தேவைப்படும். இன்னும் பலருக்கு வேலை வாய்ப்பு , மருத்துவ செலவு உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க கணக்கிட்டால் 10 ஆயிரம் ரூபாய் வந்துவிடும். நிவாரண தொகை கேட்கும் போது உதயநிதி ஸ்டாலின் ‘உங்க அப்பா வீட்டு காசையா கேட்டோம் ‘ என கூறுகிறார். ஏற்கனவே மத்திய அரசு உடனடி நிவாரண தொகையில் 75 சதவீதத்தை கொடுத்துள்ளது.

மத்திய அரசு குழு தமிழகத்தில் பார்வையிட்டு அரசு செயல்பாட்டை பாராட்டியது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அதிகாரி இன்னொரு அதிகாரியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். வெள்ளம் பாதிக்காத பகுதிகளுக்கு கூட்டி சென்று பார்வையிட செய்து, அதன் பிறகு அவர்களுக்கு படவிளக்கம் காட்டியிருப்பார்கள். அவர்கள், மக்களிடம் நேரடியாக சென்று கருத்து கேட்டு இருக்க மாட்டார்கள். அவர்கள் மாநில அரசு கொடுத்த பாதிப்பு விவரங்களை பார்வையிட்டு இருப்பார்கள் அதனால் அதிகாரிகள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு வீட்டிற்கு சென்று நீங்க நல்லா இருக்கீங்களா என்றால் அவர்கள் நலமுடன் இல்லை என்றாலும் நல்லா இருக்கிறோம் என்று தான் கூறுவார்கள் அதுபோல தான் மத்திய குழு கூறிய கருத்துக்களும்.

திமுக அரசு மீட்பு பணிகளில் மொத்தமாக செயல் இழந்துவிட்டது. மத்திய அரசு அதிகாரிகள். மாநில அதிகாரிகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மழை பாதிப்பு பகுதிகளை தமிழக அரசு கையாண்ட விதம் மோசம்.  மத்திய அரசிடம் மாநில அரசு பணம் கேட்டுள்ளனர். அந்த பணம் வரும். சேதங்கள் பட்டியல் போகும். சேதங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள். அதற்கேற்றாற் போல மத்திய அரசு நிவாரண உதவிகளை கொடுக்க தான் போகிறது. ஆனால் மத்தியகுழு கூறியதை குறிப்பிட்டு தாங்கள் வேலை செய்ததாக முதல்வர் கூறிக்கொண்டு இருப்பது நகைப்புக்குரியது. எந்த மாநிலத்திலும் அதிகாரிகள் கொடுத்த சான்றிதழை எந்த முதல்வரும் இப்படி பாராட்டாக கருதி வெளியில் கூறியதில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Recent Posts

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

2 hours ago

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

3 hours ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

4 hours ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

5 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

6 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

7 hours ago