BJP: நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி முடித்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது.
கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி 39 தொகுதிகளுக்கும் பங்கீடு முடிவடைந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். அதேசமயம், பாஜகவின் தாமரை சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேலும் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
இதனால், மொத்தம் 24 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்பட்டியல் உடன் தலைவர்கள் இன்று டெல்லி செல்ல இருக்கிறோம். எனவே, இன்று மாலையில் இருந்து எந்த நேரத்திலும் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்பதை எதிர்பார்க்கலாம். இதுபோன்று கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அவர்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவார்கள்.
பாஜக என்பது ஒரு தேசிய கட்சி. ஒரு மாநில தலைவர் இங்கிருந்து வேட்பாளர்களை அறிவிப்பது நம்புடைய கட்சியின் வழக்கம் இல்லை. கூட்டணி வேட்பாளர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் தலைமைக்கு அனுப்பிவிட்டோம். இதனால் முறைப்படி, கட்சி தலைமை அறிவிக்கும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர் கூறியதாவது, எங்கள் கூட்டணியில், சுமுகமாக, மகிழ்ச்சியாக, திருப்திகரமாக எல்லோருக்கும் என்ன வேண்டுமோ அது கிடைத்திருக்கிறது. எல்லோரும் வளர வேண்டும் என்ற அடிப்படையில்கூட்டணியின் பங்கீடு முடிந்திருக்கிறது.
தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு மாறுபட்ட அரசியலை பாஜக முன்னெடுத்து வருகிறது. அதற்கான ஒரு பெரிய முயற்சி தான் இந்த 2024 மக்களவைத் தேர்தல். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப் பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும், தமாகா, ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தை குறித்து கேள்விக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, தமாகா 3 இடங்களில் போட்டியிடுகின்றனர்.
ஓபிஎஸ் முடிவு குறித்து நான் அறிவிப்பது நன்றாக இருக்காது, அவரே விரைவில் அறிவிப்பார் எனவும் கூறினார். எனவே தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில், பாஜக 20, பாமக 10, அமமுக 2, ஐஜேகே 1, புதிய நீதிக்கட்சி 1, தமாகா 3, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் 1, தமமுக 1 என வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…