20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள், 24 தொகுதிகளில் தாமரை சின்னம்.! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

annamalai

BJP: நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி முடித்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது.

Read More – மக்களவை தேர்தல் : 2ஆம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி 39 தொகுதிகளுக்கும் பங்கீடு முடிவடைந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். அதேசமயம், பாஜகவின் தாமரை சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேலும் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

இதனால், மொத்தம் 24 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்பட்டியல் உடன் தலைவர்கள் இன்று டெல்லி செல்ல இருக்கிறோம். எனவே, இன்று மாலையில் இருந்து எந்த நேரத்திலும் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்பதை எதிர்பார்க்கலாம். இதுபோன்று கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அவர்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவார்கள்.

Read More – திமுக வேட்பாளர் வெளியீடு! எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி? 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

பாஜக என்பது ஒரு தேசிய கட்சி. ஒரு மாநில தலைவர் இங்கிருந்து வேட்பாளர்களை அறிவிப்பது நம்புடைய கட்சியின் வழக்கம் இல்லை. கூட்டணி வேட்பாளர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் தலைமைக்கு அனுப்பிவிட்டோம். இதனால் முறைப்படி, கட்சி தலைமை அறிவிக்கும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர் கூறியதாவது, எங்கள் கூட்டணியில், சுமுகமாக, மகிழ்ச்சியாக, திருப்திகரமாக எல்லோருக்கும் என்ன வேண்டுமோ அது கிடைத்திருக்கிறது. எல்லோரும் வளர வேண்டும் என்ற அடிப்படையில்கூட்டணியின் பங்கீடு முடிந்திருக்கிறது.

Read More – இந்தியாவில் ஜனநாயகம் இல்லை… ரயில் டிக்கெட் கூட எடுக்க முடியவில்லை… ராகுல் காட்டம்.!

தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு மாறுபட்ட அரசியலை பாஜக முன்னெடுத்து வருகிறது. அதற்கான ஒரு பெரிய முயற்சி தான் இந்த 2024 மக்களவைத் தேர்தல். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப் பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் தெரிவித்தார். மேலும், தமாகா, ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தை குறித்து கேள்விக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, தமாகா 3 இடங்களில் போட்டியிடுகின்றனர்.

ஓபிஎஸ் முடிவு குறித்து நான் அறிவிப்பது நன்றாக இருக்காது, அவரே விரைவில் அறிவிப்பார் எனவும் கூறினார். எனவே தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில், பாஜக 20, பாமக 10, அமமுக 2, ஐஜேகே 1, புதிய நீதிக்கட்சி 1, தமாகா 3, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் 1, தமமுக 1 என வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்