பிரேமலதாவுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை, ஈபிஎஸ்..!

நேற்று தேமுதிக கட்சியின் 18வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஜயாகநாத் அவர்கள் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்கு பின் விஜயகாந்தை நேரில் பார்த்ததால் தொண்டர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.
இந்த நிலையில், இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானமாக தேமுதிக கட்சி பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். அடுத்து நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் தலைவர் விஜயகாந்திற்கு மட்டுமே இருக்கிறது என்றும் , தொண்டர்கள் உற்சாகமுடன் தேர்தல் களத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொண்டர்கள் முன் விஜயகாந்த்.! தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா.!
இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரேமலதாவுக்கு, அண்ணாமலை அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘தேமுதிக பொதுச் செயலாளராக, சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பக்கபலமாக, இத்தனை ஆண்டுகள் மக்கள் பணிகளை மேற்கொண்டு வந்த சகோதரி அவர்கள், தமது புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
தமிழக மக்களின் பேரன்புக்கு உரியவரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆற்றலும், துணிச்சலும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடமும் வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். கேப்டன் அவர்கள் முன்னெடுத்த மாற்று அரசியலை, மேலும் பல படிகள் முன்கொண்டு செல்ல, பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றிருக்கும் அன்பு சகோதரி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், தங்களின் கட்சிப்பணி சிறக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் – பிரதமர் மோடி கவலை.!
March 28, 2025