அண்ணாமலை மத்திய பா.ஜ.க. அரசால் அனுப்பப்பட்டுள்ள ஸ்லீப்பர் செல்லா…? – கே.எஸ்.அழகிரி
அண்ணாமலை அவர்கள் தமிழக பா.ஜ.க. தலைவரா? இல்லை மத்திய பா.ஜ.க. அரசால் அனுப்பப்பட்டுள்ள ஸ்லீப்பர் செல்-ஆ என்கிற சந்தேகம் வருகிறது என கே.எஸ்.அழகிரி ட்வீட்.
தமிழக காவல்துறை அறிவாலயத்தை காக்கும் துறையாக செயல்படுவதாக, தமிழக காவல்துறையிடம் பல கேள்விகளை எழுப்பி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், அண்ணாமலையின் அறிக்கை குறித்து கே.எஸ்.அழகிரி விமர்சித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழக காவல்துறையை கேள்வி எழுப்பும் வகையில் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையை படிக்கும்போது அண்ணாமலை அவர்கள் தமிழக பா.ஜ.க. தலைவரா? இல்லை மத்திய பா.ஜ.க. அரசால் அனுப்பப்பட்டுள்ள ஸ்லீப்பர் செல்-ஆ என்கிற சந்தேகம் வருகிறது. இத்தகைய ரகசிய அரசு ஆவணங்கள் எப்படி அவருக்கு கிடைத்தது என வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.
இத்தகைய ரகசிய அரசு ஆவணங்கள் எப்படி அவருக்கு கிடைத்தது என வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.@captainnewstv @PTTVOnlineNews @News18TamilNadu @news7tamil @polimernews @rajnewstamil @Kalaignarnews @sunnewstamil @ThanthiTV @cauverytv @bbctamil@AsianetNewsTM @ibctamilmedia
— K.S.ALAGIRI (@KS_Alagiri) October 31, 2022