அக்காவும் தம்பியும் போல நானும் அண்ணாமலையும் ஒற்றுமையாக செயல்படுகிறோம்.! – வானதி சீனிவாசன்

எனக்கும் அண்ணாமலைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டி.
கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நானும் அண்ணாமலையும் அக்காவும், தம்பியுமாக பாஜகவை வளர்க்கின்றோம். எனக்கும் அண்ணாமலைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
கல்யாண மேடைகளை எதிர்க்கட்சிகளை திட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்துகிறார். பிரதமர் மோடியின் மீது விமர்சனம் வைத்துள்ளார். என்னுடைய ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்றும் அவர் சொல்லி இருக்கிறார். எதற்காக தமிழக முதல்வருக்கு இந்த பயம் வருகிறது? அவரது ஆட்சியை, மாநில அரசை கலைப்பதற்கு என்ன காரணங்கள் கூறுவதற்கு இடம் இருக்கிறதோ? அதுவெல்லாம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறாரா? எந்த ஒரு மாநில அரசையும், ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்க பாஜகவிற்கு உடன்பாடு இல்லை.
அப்படி எந்த ஆட்சியையும் கலைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதற்கு பிரதமர் மோடி எரிச்சல் அடைந்திருக்கிறார் என கூறுகிறார். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. நீங்களே உங்களை பெரிதாக நினைத்துக் கொண்டு, பிரதமர் மோடி உங்களை பார்த்து பயப்படுவதாக நினைப்பது கற்பனை. முதல்வர் ஸ்டாலின் அந்த கற்பனை உலகத்தில் இருந்து வெளியே வந்து, தமிழகத்தில் இருக்கும் பிரச்சனைகளை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025