அண்ணாமலையின் விளம்பர அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது – கடம்பூர் ராஜு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது” அண்ணாமலையின் விளம்பர அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. 10 ஆண்டில் தமிழ்நாட்டுக்காக பாஜக என்னென்ன செய்துள்ளது என பட்டியலிட அண்ணாமலை தயாரா எனவும் கேள்வி எழுப்பினார். கடந்த முறை தேர்தல் அறிக்கையில் பாஜக லட்சத்தீவை மீட்போம் என கூறினார்கள். ஆனால் தீர்வு காணவில்லை, காவிரி பிரச்சனை தொடர்பாக மத்திய நீர்வள த்துறை மூலம் தீர்வு காண்போம் எனக் கூறினார்கள் இதுவரை தீர்க்கப்படவில்லை.
தமிழக எய்ம்ஸ் மருத்துவமனை உடன் அடிக்கல் நாட்டப்பட்ட பல மாநிலங்களில் கல்லூரியில் உருவாகிவிட்டது. ஆனால் தமிழகத்திற்கு எய்ம்ஸ் இன்னும் வரவில்லை, மதுரையில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி இன்று வரை ஒரு பணிகள் கூட தொடங்கவில்லை என்று தெரிவித்தார்.
12 ஆம் தேதி விசிக, கொ.ம.தே.க உடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று இன்று வரையும் அதிமுக கோரிக்கையும், கொள்கையும் அது தான், நீட் தேர்வு வேண்டாம் என போராடிய மாநிலம் தமிழகம் தான் என்பது தமிழக மக்களுக்கு தெரியும், நீட் தேர்வு வேண்டாம் என்று விலக்கு பெறக்கூடிய கடைசி நிமிடத்தில் உச்சநீதிமன்றம் தடை விதித்ததன் காரணமாக தான் தமிழக்தில் நீட் தேர்வு வந்தது.
மீண்டும் நீட் தேர்விற்கு விலக்கு கேட்டோம் , ஆனால் இதுவரை விலக்கு தரவில்லை. தமிழகத்தில் அண்ணாமலை விளம்பர அரசியல் செய்து கொண்டு இருக்கிறார். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எந்த விளம்பரமும் தமிழகத்தில் எடுபடாது என கடம்பூர் ராஜு தெரிவித்தார்.