மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் – வழக்கு முடித்து வைப்பு!
மதுரை சித்திரை திருவிழா தொடர்பான வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.
மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவை இந்தாண்டு அமல்படுத்த வேண்டாம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அன்னதாம் வழங்க உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஆட்சியர் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. மதுரை ஆட்சியர் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி கனகேஸ்வரி என்பர் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், 5 லட்சம் மக்கள் கூடும் இடத்தில் இதனை நடைமுறைப்படுத்துவது எப்படி சாத்தியம்? என்றும் பிற விழாக்களின் போது இதே போல் நிபந்தனை விதிக்கப்பட்டதா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினர்.
அடுத்த ஆண்டு போதிய கால அவகாசம் வழங்கி கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வரலாம் எனவும் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.