Annabirthday: பேரறிஞர் அண்ணா 115.! காஞ்சிபுரத்தில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
முன்னாள் முதல் அமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115 -வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அறிஞர் அண்ணா என தமிழகம் முழுவதும் போற்றி அழைக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்கள் அரசியல் தலைவர், தமிழ்நாடு முதல்வர் என்பதை தாண்டி தனது மொழிப்புலமைக்காக பெயர்பெற்றவர்.
தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் சொற்பொழிவாற்றும் அளவிற்கு திறன் கொண்டிருந்தவர். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், காஞ்சிபுரம் மாநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா உருவச்சிலைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 115ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ள நிலையில், முதலமைச்சர் மரியாதை செலுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து, அறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இன்று முதல் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டபடி, காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்த ஊரில் நடைபெற உள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். நெற்றில் இருந்து இந்த திட்டத்தின் கீழ் மகளிருக்கு 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.