அண்ணா பல்கலைகழக அரியர் தேர்வுகளை எழுத பழைய முறை அமல்!!
மாணவர்களின் வேண்டுகோள்படி அண்ணா பல்கலைகழக அரியர் தேர்வுகளை எழுத பழைய முறை அமல் படுத்தப்படுகிறது என்று அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
பொறியியல் கல்லூரிகளின் படிப்புகளில் அரியர் தேர்வுகளை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே எழுதும் வகையில் இருந்து . மேலும் ஒரு பருவத்தில் 3 அரியர் பாடங்களை மட்டுமே எழுத முடியும் என்று அண்ணா பல்கலைகழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் பொறியியல் படிப்புகளில் அரியர் தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,மாணவர்களின் வேண்டுகோள்படி அண்ணா பல்கலைகழக அரியர் தேர்வுகளை எழுத பழைய முறை அமல் படுத்தப்படுகிறது. முதல் செமஸ்டரில் அரியர் வைத்தால் 2ம் செமஸ்டரிலேயே அதை எழுதலாம் என்றும் தெரிவித்துள்ளது.