சர்சையில் சிக்கிய அண்ணா பல்கலைக்கழகம்…!நவம்பர் 2-ம் தேதி நடைபெற்ற தேர்வு மீண்டும் நடைபெறுகிறது …!
கடந்த 2-ம் தேதி நடைபெற்ற தேர்வை வரும் 28-ம் தேதி மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கீழ் 538 உறுப்புக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. இதில் கடந்த 2-ம் தேதி மின்னணு தொலைத் தொடர்பியல் (ECE) பிரிவில் மின்னணு சாதனங்கள் என்ற தேர்வு நடைபெற்றது. இதில் 2017 ஆம் ஆண்டு வினாத்தாளில் உள்ள அதே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் வரும் 28-ம் தேதி மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.மேலும் துறைரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.