இன்று முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல இயங்கும்.!
இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்று முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டதால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளித்த நிலையில், தற்போது ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டதால் இன்று முதல் பல்கலைக் கழகம் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக அனைத்து பேராசிரியர்களும், ஊழியர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு வாராதவர்கள் விடுப்பு எடுத்ததாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.