அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் விட்ட வருமான வரித்துறை.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அண்ணா பல்கலைக்கழகத்தின் கடந்த 2 ஆண்டுகளில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு வழங்கிய உழைப்பூதியத்தில் இருந்து சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வரை TDS எனப்படும் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகையை முறையாக செலுத்தவில்லை எனக் கூறி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் வரியை உடனடியாக செலுத்தி அதற்கான ரசீதுகளுடன் மார்ச் 13ம் தேதி காலை வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. இதில் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.