அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்து பெற இறுதி முடிவினை தெரிவிக்க மாநில அரசுக்கு மத்திய அரசு கெடு…

Default Image

கடந்த ஆண்டு  மத்திய அரசு நாட்டில் உள்ள  முக்கிய ஐந்து  பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடிவு செய்து அதனை அறிவித்தது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் முடிவு குறித்து ஆராய  தமிழக அரசு 5 அமைச்சர்கள் கொண்ட ஒரு குழு ஒன்றை அமைத்தது. இதனை தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைகழகம் , சீர்மிகு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும்  அண்ணா பல்லைக்கழகம் என இரண்டாக பிரிக்கப்படும் என்று  தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் சிறப்பு அந்தஸ்த்தை ஏற்பது குறித்து தமிழக அரசு இறுதி முடிவெடுக்கவில்ல்லை. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டால் தமிழகத்தில் தற்போது வரை பின்பற்றப்பட்டு வரும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறை பின்பற்ற அனுமதிக்கப்படுமா? என்பதில் மத்திய அரசு உறுதியான பதிலை தமிழக அரசுக்கு தற்போது வரை  தெரிவிக்கவில்லை என்கிற காரணம் தமிழக அரசின்  தரப்பில் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் சிறப்பு அந்தஸ்து குறித்த தனது முடிவினை தமிழக அரசு வரும் 31-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த   சிறப்பு அந்தஸ்து  அண்ணா பல்கலை கழகத்திற்கு வழங்கப்பட்டால் மத்திய அரசு ஐந்தாண்டுகளுக்கு ஆயிரம்  கோடி ரூபாயும் தமிழக அரசு ஐந்தாண்டுகளுக்கு 500 கோடி  என மொத்தம் 1,500 கோடி சிறப்பு அந்தஸ்த்தின் வாயிலாக கிடைக்கும். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படவுள்ள சிறப்பு அந்தஸ்த்தினை தமிழக அரசு ஏற்காவிட்டால்  நாட்டில் உள்ள வேறொரு பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்படும்  என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
donald trump harvard university
anil kumble Andre Russell
DMK senthil balaji
JDVance MEET PM MODI
Seeman
KKR VS GT