அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆண்டு தோறும் அண்ணா பல்கலைக் கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது.
அந்த வகையில்,நடப்பு ஆண்டில் தமிழகத்தில் டான்செட் தேர்வு மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.குறிப்பாக, எம்சிஏ படிப்புகளுக்கு மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும்,பிற்பகல் 2:30 முதல் மாலை 4:30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும்.மேலும்,எம்இ,எம்டெக்,மார்ச்,எம்பிலான் படிப்புகளுக்கு மே 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,டான்செட் நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன.
இந்நிலையில்,டான்செட் தேர்வு (TANCET) 2022 இன் நுழைவுச் சீட்டுகள் இன்று (மே 2) வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,அண்ணா பல்கலைக்கழகத்தின் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதள பக்கத்தில் டான்செட் 2022 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் சமர்ப்பித்த விண்ணப்பத்தில்,பெயர் உள்ளிட்ட விபரங்கள் திருத்துவதற்கான கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி,இன்றைய தினத்துக்குள் (மே,2) விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம்,கையொப்பம் இல்லாமல் அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.மாறாக,முழு விபரங்களை பதிவு செய்யாதவர்களுக்கு மின்னணு ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TANCET ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கான முறைகள்:
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…