சான்றிதழ் கட்டணத்தை 10 மடங்கு உயர்த்திய அண்ணா பல்கலைக்கழகம்…!
அண்ணா பல்கலைக்கழகம் தொலைந்துபோன Grade / Mark Sheet-ஐ மீண்டும் பெற ரூ.300-ஆக இருந்த கட்டணம் ரூ.3,000-ஆகவும், Degree Certificate-க்கு கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தி உள்ளது.
கிரேடு, மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால், புதிய சான்று பெறுவதற்கான கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் 10 மடங்கு உயர்த்தியுள்ளது.
அதனபடி, தொலைந்துபோன Grade / Mark Sheet-ஐ மீண்டும் பெற ரூ.300-ஆக இருந்த கட்டணம் ரூ.3,000-ஆகவும், Degree Certificate-க்கு கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2-ஆம் முறையாக சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பதற்கு கட்டணமாக ரூ.10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.