ஜூலை 29-ல் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. பிரதமர் மோடி பங்கேற்பு!
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார்.
ஜூலை 29 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் 42-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. சென்னையில் நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பட்டங்களை வழங்குகிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். மேலும், இவ்விழாவில் ஆளுநர், முதலமைச்சர் முக ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.