கஜா புயலை தொடர்ந்து அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு..! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
இதனால் கஜா புயலை தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் கஜா புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ளார்.தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கஜா புயல் காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது . தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாளை நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் 22ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.