தமிழகத்தில் பிப்ரவரி 18-ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு- அண்ணா பல்கலைக்கழகம்!
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 18-ம் தேதி முதல் 2,3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகளல் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. தற்பொழுது கொரோனாவின் தாக்கம் சற்று குறையத்தொடங்கிய நிலையில், கடந்த 18 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் பிப்ரவரி 18-ம் தேதி முதல் 2,3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 18 முதல் மே 21 வரை வகுப்புகள் நடைபெறும் என்றும், BE பயிலும் 2,3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மே 24 பிராக்டிகல் தேர்வும், ஜூன் 2 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.