#BreakingNews : ஆன்லைன் மூலம் இறுதி செமஸ்டர் தேர்வு -தேதியை அறிவித்த அண்ணா பல்கலைகழகம்
இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 22 முதல் 29 -ஆம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைகழக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.இதனிடையே கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.மேலும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிக்கைகக்கு எதிராக கல்லுரி மாணவர்கள் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
இதனிடையே அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில், யுஜிசி (UGC ) வழிமுறைகளைப் பின்பற்றி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில் அண்ணா பல்கலைகழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 22 முதல் 29 -ஆம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைகழக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இளநிலை, முதுநிலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.தேர்வு நடைபெறும் ஒருவாரத்திற்கு முன்னர் மாதிரி தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி (கேமராவுடன் ) , லேப்டாப், மைக்ரோ போன் வசதியுடன் இணைய வசதியுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் இறுதி செமஸ்டர் தேர்வு -தேதியை அறிவித்த அண்ணா பல்கலைகழகம்#SemesterExam | #AnnaUniversity pic.twitter.com/A9DXHiCTIi
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 8, 2020