ஏப்ரல் வரை ஆன்லைன் வழி வகுப்புகள் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைகழகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏப்ரல் வரை ஆன்லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும், ஆன்லைன் வகுப்புகளில் ஒரு நாளைக்கு நாள் ஒன்றுக்கு 5 வகுப்புகள் மட்டுமே நடைபெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.