அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

2002-03 முதல் பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ப்பினை அறிவித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள், நவம்பர் மற்றும் டிசம்பர் மாத செமஸ்டரில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ப்பினை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் www.coe1.annauniv.edu இணையதளத்தில் வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5000 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.