அண்ணா தொழிற்சங்க தேர்தல் வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 5 கட்டமாக நடைபெறும் என அதிமுக அறிவிப்பு.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாக, வருகின்ற 14.08.2021, 22.08.2021, 29.08.2021, 07.09.2021 மற்றும் 17.09.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான கால அட்டவணை இத்துடன் வெளியிடப்படுகிறது என அறிவித்துள்ளனர்.
அதே போல், மண்டலங்கள் மற்றும் பணிமனைகளில் தேர்தல்களை நடத்துவதற்காக, தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பணிமனைகளின் தேர்தல் ஆணையாளர்களாகக் கீழ்கண்டவர்கள், கீழ்கண்டவாறு நியமிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
எனவே, கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை முறைப்படி நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…